Tuesday, 30 September 2014

மீண்டும் தெலுங்கு படத்தில் நயன்தாரா!


வயதான ஹீரோக்களை விட இளவட்ட நடிகர்களெல்லாம் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, தமிழில, இது நம்ம ஆளு, வாலு, நண்பேன்டா, தனி ஒருவன், மாஸ் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில், விஜயசேதுபதி உள்ளிட்ட சில வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நயனை ஜோடி சேர்க்கும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, வளர்ந்து வரும் சில இளவட்ட ஹீோக்களும் நயனுடன் கட்டிப்புடி நடனமாட வரிந்து கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் தமிழில் பிசியாக இருப்பதால் இளசுகள் பக்கம் திரும்பாத நயன்தாரா, தற்போது தெலுங்கில் நடிகர் சாய்குமாரின் மகன் நடிக்கும் படத்திற்கு எஸ் சொல்லியிருக்கிறாராம். தனது மகன் ரொம்ப சின்ன பையன் என்றாலும், நயன்தாரா இன்னமும் இளமையாகவே இருப்பதால் மகனுக்கு, மேட்சாக இருப்பார் என்று நினைக்கிறாராம் சாய்குமார்.
மேலும், ஏற்கனவே அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுத்ததால் நயன்தாரா மீது ஓராண்டு ரெட் கார்ட் போடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நயன்தாராவின் அபிமானிகள் ஒன்றுதிரண்டு அவருக்கு ஆதரவுக்குரல கொடுத்ததின் காரணமாக அந்த ரெட் கார்ட் கிரீன் கார்டாகி விட்டதாக கூறப்படுகிறது.

ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’!


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

2003ல் ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த ‘ஈ, கற்றது தமிழ்’ ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக ‘சிவா மனசுல சக்தி, கோ’ ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது.
‘நண்பன், என்றென்றும் புன்னகை’ படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக ‘கோ’ படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
அதனால் ஜீவா தற்போது ‘யான்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அதில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளது. ‘கோ’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.
அதே போல ‘யான்’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் ‘கோ’ வெற்றி ‘யான்’ படத்திலும் கிடைக்கும் என்று யாவருமே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.